TANRECTA

கல்லூரி ஆசிரியர்கள் பணியினின்று ஓய்வு பெற்றதும் அவர்களுடைய இயக்க உணர்வுகளும் கல்விப்பணி மற்றும் சமுதாயப் பணி புரியும் ஆர்வமும் குறைந்து விடுவதில்லை, அவற்றிற்கு ஒரு வடிகால் அமைக்கவும் அவர்களுடைய நலன்களை பாதுகாக்கவும் ஒரு அமைப்பு தேவை, பேரா,இளவரசு அவர்களின் முயற்சியில் 10.01.1999 அன்று தஞ்சையிலே தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.